தஞ்சாவூர், ஜன.6 தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், தஞ்சை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.மானுசாவை, பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவி ஜி.மானுசா. இவர் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில், தஞ்சை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். 

இந்நிலையில் பள்ளிக்கு ஆய்வுக்காக வந்திருந்த மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம், மாணவி குறித்து கேட்டறிந்து, பொன்னாடை அணிவித்து மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற  தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு கணிதப் பாடத்தை நடத்தினார்.

முன்னதாக பள்ளிக்கு வந்த அவரை தலைமை ஆசிரியர் எஸ். இந்திரா சாந்தி வரவேற்றார். அப்போது உதவி தலைமையாசிரியர் சி. தமிழ்வேந்தன், வகுப்பாசிரியர் ஆர்.வளர்மதி, தமிழாசிரியர் எஸ்.காமாட்சி கவிதா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். 

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/