தஞ்சாவூர் ஆக 17 ஏ.எம்.சி லயன்ஸ் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொறுப்பாளர்களின் பணியேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தது.

சங்கத்தின் சாசனத் தலைவர் லயன் ஜாஹிர் ஹூஷேன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மற்றும் இணைய வழியில் தலைமையுரை மற்றும் வரவேற்புரை வழங்கினார்,

சங்கத்தின் செயலாளர் லயன் விவேகானந்தன் கடந்த ஆண்டு செய்த சேவைகளை பட்டியலிட்டு பேசினார், முன்னாள் மாவட்ட ஆளுநர் நட்பு நாயகன் முகமது ரஃபி அவர்கள் லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு தலைமையிலான நிர்வாகக்குழுவினரை பதவியில் அமர்த்தினார்.

கடந்த கால் நூற்றாண்டுகளாக சேவைகளில் ஈடுபட்டு வருகின்ற கல்லூரி கால நண்பர்களால் உருவான இச்சங்கத்தினை அதன் சேவைகளை குறிப்பாக அரிமா வனம், இரத்த தாணம், ஆக்ஸிஜன் மாடிலேட்டர் சேவைகளை பாராட்டி பேசினார்.

மேலும் இணைய வழியில் சிறப்பு விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் சீனிவாசன், சங்கத்தின் சேவைகளை அங்கீகரித்து சிறப்புரை ஆற்றினார், துணை ஆளுநர் இமயவரம்பன் உறுப்பினர்களை இணைத்து வாழ்த்துரை வழங்கினார்.

முன்னாள் மாவட்ட ஆளுநர் பிரேம், பார்வைக்கோர் பயணம் மாவட்டத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட இணைப் பொருளாளர் ஸ்டீபன், மண்டலத் தலைவர் முரளி, வட்டாரத் தலைவர் ரமேஷ் மாரி, சங்கத்தின் இரண்டாம் துணை தலைவர் S. பால்ராஜ் உள்ளிட ஏராளமான லயன்ஸ் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இரண்டு மூன்று சக்கர நாற்காலிகள், கல்வி உதவித்தொகைகள், சுய முன்னேற்றத்திற்காக இளம் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல சேவைகள் செய்யப்பட்டன.

இப்பதவி ஏற்பு விழாவில் ஏற்புரை வழங்கிய ஸ்டாலின் சங்கத்தினை ஓர் முன்மாதிரி சங்கமாக செயல்பட வைக்க அத்தனை மென்னெடுப்புகளையும் எடுப்பேன் என்றும், இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் தருவது, பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவுவது, இரத்ததாணம், பிளாஸ்மாதானத்தை வலியுறுத்தி விழ்ப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது போன்ற ஏராளமான திட்டங்களை அறிவித்தார்.

விழாவின் இறுதியில் சங்க பொருளாளர் நடராஜ் அவர்கள் நன்றி கூறினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 20 க்கும் அதிகமான சங்கப் பொறுப்பாளர்களும், இணைய வழியிம் உலகின் பல இடங்களில் இருந்தும் சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தஞ்சைடுடே நிருபர்.
http://thanjai.today/