தஞ்சாவூர், ஆக.31 அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும், தொழிற்சங்க ஆசானுமாகிய தோழர் எம்.ஆர்.அப்பனின், 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, திங்களன்று, தஞ்சாவூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது.


தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தோழர் எம்.ஆர்.அப்பன் நினைவாக பொதுமக்கள் ஆதரவோடு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, தோழருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கோதண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி வரவேற்று பேசினார்.

முன்னாள் மாநில செயலாளர்  ஆர். பன்னீர் செல்வம், எம்.ஆர்.அப்பன் நினைவு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். நிறைவாக தஞ்சாவூர் வடக்கு வட்டத் தலைவர் சுப்ரமணியன்  நன்றி கூறினார். பொதுமக்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/