தஞ்சாவூர் ஆக்கு 26 தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் மக்கள் அளித்துள்ளனர்.தஞ்சை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கூடுதல் கலெக்டர் வருவாய் சுத்திரா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை பட்டா மாற்றம் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஆயிரத்து 600 விண்ணப்பங்களை பொதுமக்களிடமிருந்துபெறப்பட்டது பெறப்பட்ட விண்ணப்பங்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு கூடுதல் கலெக்டர் அறிவுறுத்தினார் கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் கௌசிக் உதவி கலெக்டர் ஜஸ்வந்த் கண்ணன் சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் சாலை தகவல் அவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 600 விண்ணப்பங்கள் வரை வரப்பட்டுள்ளது ஆனால் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஆயிரத்து 600 மனுக்கள் பெறப்பட்டது இதில் அதிக அளவில் தனியார் நிறுவன மோசடி குறித்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தனித்தனியாக அளித்த விண்ணப்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/