தஞ்சை மே 05 : சென்னை மணலியில் இருந்து சரக்கு ரயிலில் 21 வேகன்களில் 1460 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சைக்கு வந்து சேர்ந்தது.

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் மாவட்டத்தில் 17,863 ஹெக்டேரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது, தற்போது முன் பட்ட குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நிலக்கடலை, மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், டிஏபி காம்ப்ளக்ஸ் உரங்கள் போன்றவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.

இவை வேளாண் துறை வாயிலாக ஒவ்வொரு பகுதிக்கும் தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை மணலியில் இருந்து சரக்கு ரயிலில் 21 வேகன்களில் 1460 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சைக்கு வந்து சேர்ந்தது. இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்