தஞ்சை இராஜா மிராசுதார் மருத்துவமனை ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் பழமையான மருத்துவமனையாகும், மிகப்பெரிய பரப்பில் பரந்து விரிந்திருக்கும் அம்மருத்துவமனையில், கண், பல், காச நோய், மகப்பெறு மருத்துவமென பல்வேறு துறைகள் உள்ளன.
தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் இந்த மருத்துவமனையில் உள்ள பல்வேறுத் துறைகளில் மருத்துவம் பார்த்துச் செல்வது வழக்கம்.
இதில் உள்ள கண்மருத்துவத்துறைக்கு புதிதாக 120 படுக்கைகளுடன் கூடிய மருத்துவக் கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது அதனை அண்மையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் வருகை புரிந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.