தஞ்சாவூர் செப் 15 திராவிட முன்னேற்றக்கழகத்தை தோற்றுவித்தவரும் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்வித்தவரும், சுயமரியாதை திருமணச்சட்டம் போன்ற சமூக சீர்திருத்தக்கருத்துகளை சட்டமாக்கியவரும், இருமொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் வழிவகுத்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த தினம் இன்று தமிழ்நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது.

திராவிட முன்னேற்றக்கழகத்தை 1949யில் உருவாக்கினார் அண்ணா, 1967ல் தமிழ்நாட்டின் முதல்வரானார், 70 ஆண்டுகளுக்கு பின்னாலும் அவர் தோற்றுவித்த திராவிட முன்னேற்றக்கழகமே ஆட்சி செய்வதென்பது. அண்ணாவின் கருத்தியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 700 ஆயுட்தண்டனை கைதிகளை திராவிட முன்னேற்றக்கழக அரசு விடுதலை செய்து ஆணையிட்டுள்ளது.

அண்ணா மாநில சுயாட்சிக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக தனது திறம்மிகுந்த வாதங்களை இந்திய ஒன்றிய அரசிடம் வைத்தவர். இன்றைக்கு மாநில சுயாட்சி என்பது கேள்விக்கிடமான சூழலில் அண்ணாவின் கொள்கைகளும் கருத்துகளும் முன்பை விட பன் மடங்கு அதிகமாக தேவை என்றே அரசியல் கருத்தாளர்கள் கூறுகின்றனர்.

தஞ்சை டுடே அண்ணாவின் 113வது நாளை போற்றி வணங்குகின்றது.

செய்தி நிருபர் தஞ்சை டுடே
http://thanjai.today/