தஞ்சாவூர் அக் 08: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இயற்கை மற்றும் உயிர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் திம்மக்கா மரம் வளர்க்கும் திட்டத்தின் 100வது நாள் நடந்தது.

கடந்த ஜூலை 1 தேதி மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் மாவட்ட கல்வி அதிகாரி ஜான் பாக்கிய செல்வம் தொடங்கி வைக்கப்பட்டு தினந்தோறும் பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அரசு அலுவலங்கள், பள்ளிகள், சாலையோரங்கள், ஏரி, குளகரைகள், குடியிருப்பு பகுதிகளும் இதுவரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் 100-வது நாள் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் கலெக்டர் பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திட்டத்தை சிறப்பாக வழி நடத்தியதற்காக திட்ட ஆலோசகர் ரமேஷ், திட்டத் தலைவர் அருள், துணை தலைவர் அன்புமுருகன், விதை அறக்கட்டளை நிறுவனர் ஹீலர் சக்திகாந்த் , சமூக ஆர்வலர் கைலாஷ் குமார் , சிறுவன் சாய்குரு, ஆகியோரை பாராட்டி திம்மக்கா விருது வழங்கப்பட்டது.

இதில் பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பின் குறுங்காடுகள் வளர்ப்பு குழு அறிமுகம் செய்யப்பட்டது. தாசில்தார் கனேஷ்வரன், ரோட்டரியை சேர்ந்த டாக்டர் பத்மானந்தன், சுரேஷ்கண்ணா, முருகன், திருச்செல்வம். சரவணன், ராமன், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தலைவர் ஆனந்த் வரவேற்றார், முடிவில் செயலாளர் கதிரவன் நன்றியுரையாற்றினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/