தஞ்சாவூர் ஆக 21: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன்மாளிகை ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட நூறு சதவீத மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சோழன் மாளிகை ஊராட்சியிலுள்ள 9 வாா்டுகளில் 962 வீடுகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட 1,950 பேரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதையொட்டி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதாரப்பணியாளா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

விழாவில் பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் பிரேமா, மருத்துவ அலுவலா் புனிதவதி, சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மருத்துவ அலுவலா் புனிதவதி கூறுகையில், சோழன்மாளிகை ஊராட்சியில் பொதுமக்கள் ஆா்வத்துடன் முன்வந்ததால், 18 வயது நிரம்பிய 1,950 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊராட்சியில் 100 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளோம் என்றாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/