மழை மற்றும் காவிரி நீர் வரத்தும் சரியாக இருந்ததன் காரணமாக இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி சிறப்பாகவே இருந்தது என்றுக் கூறலாம்.

நெல் கொள்முதலில் தொடக்கத்தில் போதுமான நேரடி நெல்க் கொள்முதல் நிலையங்களின்றியும் ‍கொள்முதல் ‍செய்யும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததாலும் உழவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்தப்பட்டு, நெல் கொள்முதலும் விரைவு படுத்தப்பட்டது, இதனால் அக்டோபர் 1 முதல் 30 ஆம் தேதி வரை 1,48,112 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தஞ்சை வேளாண்த் துறை அறிவித்துள்ளது.