தஞ்சை மே 28: தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகள் கடல் நீர் 300 மீட்டா் உள்வாங்கிக் காணப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு இதேப்பகுதியில் 1 மீட்டர் அளவுக்கு கடல் நீர் உள் வாங்கியதை

அதிராம்பட்டினம், மதுக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இரண்டு மணி நேரமாக வீசிய பலத்த சூறைக்காற்றால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இந்நிலையில் அதிராம்பட்டினம், , ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் 300 மீட்டா் தொலைவுக்கு கடல் நீா் உள்வாங்கியது.

இதனால் மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவா்கள் கரை திரும்ப முடியாமல், படகுகளை தள்ளியப்படி வந்து கரை சோ்ந்தனா். மேலும், காற்றால் நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‍செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.