திருவையாறு: திருவையாறு போலீஸ் ஸ்டேசனில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது.

திருவையாறு போலீஸ் ஸ்டேசனில் திருவையாறு, நடுக்கடை, கண்டியூர் ஆகிய பகுதிகளில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். .

கூட்டத்தில் டிஎஸ்பி சுபாஷ்சந்திரபோஸ் பேசும்போது, குளிர்பானத்தில் மாத்திரை கலந்து குடித்தால் போதை தலைக்கு ஏறுகிறது என்று மதுபிரியர்கள் புது யோசனை கண்டுபிடித்து மதுகடைகள் மூடி உள்ளதால் குளிர்பானத்தில் பாராசெட்டமால் மாத்திரையை கலந்து குடித்துவருகின்றனர்.

சானிடரில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து உயிர் விட்டிருக்கிறார்கள். மது பிரியர்கள் மெடிக்கல் ஷாப்பில் விற்கும் குளிர்பான பாட்டில்களை வாங்கி பாராசெட்டமால் மாத்திரையை வாங்கி கலந்து போதைக்காக குடித்துவருகிறார்கள். மெடிக்கல் ஷாப்புகளில் குளிர்பானம் அதிகளவில் விற்பனை நடைபெறுகிறது.

எனவே மெடிக்கல் ஷாப் விற்பனையாளர்கள் குளிர்பானங்களை விற்க கூடாது. மருத்துவர் மருந்து சீட் கொடுத்தால் மட்டுமே மாத்திரை கொடுக்கவேண்டும், தனியாக மாத்திரை விற்க கூடாது. சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்