தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதல்வர் பொதுநிவாரண நிதிக்கான நிதி அவரிடம் வழங்கப்பட்டது.

அப்போது தலைமை அரசு கொறடா கோவி. செழியன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் கும்பகோணம் அன்பழகன், பாபநாசம் ஜவாஹிருல்லா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிஸ்வாவின் முதல்கட்ட நிதியாக ஒரு லட்சத்திற்கான காசோலையை கிஸ்வா தலைவர் ஜாகீர் உசேன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார்.

இதில் திட்டத் தலைவர் பஷீர் அகமது, ஜாகிர் உசேன், பேராசிரியர் நஜிபுதீன், அகமது தம்பி, கிஸ்வா செயலாளர் சிராஜுதீன், பொருளாளர் முகமது அஸ்லம், முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கும்பகோணம் தீன் ஜுவல்லரி சார்பில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை கிஸ்வா நிர்வாகியும் அதன் நிர்வாக இயக்குனர் அகமது தம்பி மற்றும் முபாரக் ஆகியோர் வழங்கினர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்