தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எஸ்டிஎஸ் அறக்கட்டளை சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழகமெங்கும் கொரோனா தொற்று அதிகரித்ததால் அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அமுல்படுத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதையடுத்து அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புகள் நிவாரண உதவி வழங்கி வருகின்றன. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எஸ்டிஎஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை சப்-கலெக்டர் பாலச்சந்தரிடம், எஸ்.டி.எஸ்.செல்வம் வழங்கினார். பட்டுகோட்டை தாசில்தார் தரணிகா உடன் இருந்தார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்