காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 27212 கன அடி வந்தது.
நீர் வரத்தின் அதிகரிப்பால் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு இரண்டாவது முறையா 100 அடி‍ உயரத்தை தாண்டியது, சென்ற ஆண்டு நல்ல மழையாலும் ஆற்றின் நீர் வரத்தும் நல்ல முறையில் இருந்ததால் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சிறப்பாகவே நடை‍ பெற்றது.