தஞ்சை ஏப்ரல் தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் தஞ்சாவூர் திருவையாறு, வடுககுடி, மருவூர், உப்பு காட்சிபேட்டை, மேல உத்தமநல்லூர், திருப்பந்துருத்தி, வளப்பக்குடி, நடுக்காவேரி உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காவிரி படுகையில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கிருந்து வாழை இலைகள், வாழைத்தார்கள் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் இதில் பூவன் மொந்தன், பச்சநாடா உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டு அதிலிருந்து பெறப்படும் வாழைத்தார் திருச்சி மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது அதேபோல் வாழையிலை நாள்தோறும் சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம் பெரம்பலூர் நாமக்கல் சேலம் திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் நஷ்டத்தை சந்தித்த வாழை உற்பத்தியாளர்கள் கொரோனா தளர்வுக்கு பிறகு மீண்டும் விற்பனையைத் தொடங்கினர்.
தற்போது இரண்டாவது அலை காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட் திருச்சி காந்தி மார்க்கெட் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறையத் தொடங்கியதால் உணவகங்களில் கொரோனா காரணமாக பொதுமக்கள் வருகை குறைந்ததால் வாழையிலை ஏற்றுமதி குறைந்துள்ளது அறுக்கப்பட்ட வாழை இலைகள் காய்ந்து சருகாகி வருவதாக வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து வாழை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மதியழகன் கூறியதாவது தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் இருந்து சென்னை கோயம்பேடு தியாகராய நகர் மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளுக்கு வாழை இலைகள் தினந்தோறும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக மார்க்கெட் இடமாற்றம், சிறு வியாபாரிகள் கடையடைப்பு, உணவகங்களில் 50% கட்டுப்பாடு போன்ற காரணங்களால் வாழையை நம்பி பிழைப்பு நடத்தி வரும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் பரவல் காரணமாகவும் மரத்திலேயே பழுத்து விடுவதால் குரங்குகளுக்கும் பறவைகளுக்கும் தான் உணவாகிறது எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.