வானுயர்ந்து நிற்கும் தஞ்சை பெருவூடையார் கோயிலை கட்டிய மாமன்னர் இராஜராஜன் என்னும் அருள் மொழித் தேவனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் சதய நட்சத்திரத்தில் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கொரோனாத் தொற்றுக் காரணமாக மன்னரின் பிறந்தநாள் கொண்டாடப்படுமா? என்கின்ற ‍கேள்வி எழுந்தது, தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழக்கம் போல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுமென அறிவித்து இன்று விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

‍கோயிலின் ‍வெளியே அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இ்ன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், வானுயர்ந்த கோயிலைக் கட்டிய மன்னரின் சிலை கோயிலுக்கு வெளியே ஒரு ஒரமாய் நிற்பதை கவலையுடன் தான் தஞ்சை மக்கள் எப்போதும் பார்த்து வருகின்றனர்.