தஞ்சாவூர் டிச, 11- பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் உடனே விலையைக் குறைக்க வலியுறுத்தியும் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் அரங்கத்தில் சிஐடியூ சார்பில் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் அரவிந்த், மாவட்ட தலைவர் அர்ஜுன், சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் அன்பு, மூர்த்தி, செங்குட்டுவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் போராட்டத்தின்போது 20க்கும் மேற்பட்ட தங்களது மோட்டார் சைக்கிளில் நடுரோட்டில் நிறுத்திவிட்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டம் சுமார் 25 நிமிடம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/