தஞ்சை இராஜா மிராசுதார் மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கிய பழமையான மருத்துவமனை மட்டுமின்றி 1875 ஆம் ஆண்டே அது ஒரு மருத்துவ பள்ளியாக செயல் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை நடிகை ஜோதிகா தஞ்சைப்பகுதியில் படபிடிப்பிற்கு வந்த போது இராஜா மிராசுதார் மருத்துவமனை குறித்தும் அதன் பராமரிப்புக் குறித்தும் பேசியிருந்தார், அதற்கு வெகு சிலர் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் பொதுமக்கள் தரப்பில் அவருக்கு நல்ல அதரவே வந்தது.
இந்நிலையில் ஜோதிகாவின் கணவர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை தஞ்சை மருத்துவமனைக்கு உதவிகள் செய்து அதன் குழந்தைகள் புங்காவை புதுபித்து, மருத்துவமனைக்குள்ளும் பெயிண்ட் வேலைகள் செய்து ஒவியங்கள் வரைந்து அழகுற செய்துள்ளனர். சும்மா வாய்ப்பேச்சு மட்டும் பேசாமல், உதவி செய்து காட்டியதில் தஞ்சை மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.