அக்டோபர் 1 தமிழ்நாடெங்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது, தஞ்சைக்கு அருகேயுள்ள சூரக்கோட்டை என்ற ஊர் நடிகர் திலகத்தின் சொந்த ஊராகும்.

விழுப்புரம் கணேசன் என்ற பெயரால் நாடக உலகில் வலம் வந்த சிவாஜி அவர்கள், அண்ணா அவர்களின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்கிற நாடகத்தில் மிகச்சிறப்பாக நடித்ததால் தந்தைப் பெரியார் அவர்களால் சிவாஜி என்ற சிறப்பு பெயர் சூட்ட அன்று முதல் சிவாஜி கணேசன் என்றழைக்கப்பட்டார்.

தமிழகத்தின் மார்லன் பிரான்டோ என்று அண்ணா அவர்களால் புகழப்பட்ட சிவாஜி அவர்களுக்கு தஞ்சையில் மணிமண்டபத்திற்கு எதிரில் ஆளுயுர வெங்கலச்சிலை நிறுவப்பட்டது.

நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல் வேறு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.