தஞ்சையில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது இதனால் விளைந்த குறுவை பயிர்கள் வீதிகளில் நனைந்து முளைத்து வருவதாக உழவர்கள் வேதனை.
ஆண்டு இறுதி கணக்கு நடைபெறுவதால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன இவையாவும் ஆக்டோபர் 5 தேதி தான் திறக்கப்படும் என்பதால் விளைந்த நெற்களை வீதிகளில் அடுக்கியும் தார்பாலின் போர்த்தியும் உழவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
தொடர் மழையால் விளைந்த நெற்கள் நனைந்து முளைத்து வருகின்றன, அதனைப் பயன் படுத்தி வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு விளைந்த நெற்களை கேட்பதாகவும், அரசு விரைவில் கொள்முதல் நிலையங்களைத் திறந்து உழவர்களின் துயரினை நீக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.