தஞ்சாவூர் ஜூன் 2 தஞ்சை மாவட்டத்தில் ரூபாய் 20, 50 கோடி மதிப்பில் 1169 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடந்துவரும் தூர்வாரும் பணிகள் வரும் 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கண்காணிப்பு அதிகாரி பிரதீப் யாதவ் கூறினார் தஞ்சை மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் ஆறுகள் ஏரிகள் தூர் வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன அதன்படி தஞ்சையை அடுத்த கூடலூரில் வெண்ணாற்றில் 500 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் ரூபாய் இரண்டு லட்சத்தில் நடந்து வருகிறது இந்த பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் தூர்வாரும் பணி கண்காணிப்பு அதிகாரி பிரதீப் யாதவ் ஆய்வு செய்தார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது தஞ்சை மாவட்டத்தில் 1169 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 20 கோடியே 50 லட்சம் செலவில் பாசன வாய்க்கால்கள் மற்றும் ஆறுகள் ஏரிகள் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த பணிகள் தொடங்கி இரண்டு நாட்கள் ஆகிறது ஒரு சில இடங்களில் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை இப்பகுதிகளில் விரைவில் பணிகள் தொடங்கப்படும் தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடங்களை விவசாயிகள் நேரில் சென்று பார்வையிடலாம் இந்த பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தண்ணீர் திறப்பதற்கு முன்பு பணிகள் நிறைவடையும் தண்ணீர் திறக்கும் தேதியை தமிழக அரசு முடிவு செய்யும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் மூலம் கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடையும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தாலும் பிரிவு வாய்க்கால்களில் தண்ணீர் வரும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும் தஞ்சை மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள் அனைத்தும் வரும் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் வெண்ணாற்றில் ஒருபுறமாக மணல் திட்டுகள் மேடுகள் ஏற்பட்டு நாணல், காட்டாமணக்குகள் காடுகள் போல் அடர்ந்து படர்ந்து உள்ளது இதனால் வெண்ணாற்றில் நீர்வழிப் போக்கு திசையில் மாற்றம் ஏற்படுகிறது இதனால் வெள்ள காலங்களில் கூடலூர்,பள்ளி அக்ரஹாரம் உள்ளிட்ட கிராம பகுதி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது ஆகவே மண் திட்டுக்களை மண்வாரி சமன்செய்து போக்கை சீரமைக்க இந்த தூர்வாரும் பணி மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார் எம்எல்ஏ துரை சந்திரசேகரன் வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் உதவி செயற்பொறியாளர்கள் அய்யம்பெருமாள் சண்முகவேல் உதவி பொறியாளர்கள் பூங்கொடி வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்,செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்