வடகிழக்கு பருவ மழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் சிரமப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஏரி, குளங்கள் என்று நீர் நிலைகள் மறுபக்கம் நிரம்பி வருகின்றன.

வடகிழக்கு பருவமழை சராசரியாக இந்த ஆண்டு 637.02 மி.மீ பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, இதுவரையில் 296.41 மி.மீ அளவு மழை பெய்யுதுள்ளது ,இது எதிர்பார்க்கும் அளவில் 46 சதவீதம் எனலாம்.

இதனால் கல்லனை கால்வாயின் கோட்டப்பிரிவில் உள்ள 524 ஏரிகளில் 225 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது என்றும் 165 ஏரி, குளங்கள் 75 முதல் 100 சதவீதம் நிரம்பி உள்ளதாகவும் ஏனைய ஏரி குளங்கள் கணிசமான அளவு நிரம்பி வருவதாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் யாரும் இந்த மழைக்காலங்களில் குளிக்க மற்றும் வேறு காரணங்களுக்காக ஏரி குளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.