தஞ்சை ஆக் 22 கொரோனாவின் பாதிப்பு இதுவரை சரியாக குறையததால், தஞ்சை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கையாக தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் மூகாம்களை நடத்தி வருகின்றது.

இந்நடவடிக்கையின் அங்கமாக தஞ்சை மாநகராட்சியின் 16 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகின்றது, அவை தஞ்சை பூக்குளம், கல்லறை மேட்டுத்தெரு, சன்னாசிக்குளம், காவடிக்காரத் தெரு, ஆடக்காரத்தெரு, அறிஞர் அண்ணா அங்கன் வாடி நிலையம், கீழ வண்டிக்காரத்தெரு, சின்னையா பிள்ளைத் தெரு அங்கன் வாடி, பூக்கார வடக்குத் தெரு, ராஜராஜன் தெரு அங்கன் வாடி, ‍டேனியல் தாமஸ் நகர் ஆகிய இடங்களில் நடைபெறும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.

‍கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத சூழலில் பொதுமக்கள், தங்களை சோதித்து சரியான தனிமனித பாதுகாப்பினை மேற்க் கொள்ளுமாறும் அவர் வேண்டுதல் விடுத்துள்ளார்.