தஞ்சையில் அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக புகழ் ‍பெற்ற பேருந்து நிறுத்தம் இராமநாதன் ஹாஸ்பிடல், எழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவையாற்றியவர் மருத்துவர் இராமநாதன் அவரது ‍பெயரிலேயே பேருந்து நிறுத்ததின் பெயர் விளங்கியது.

அவரது மகன் மருத்துவர் குமார் அவர்களும் தந்தையைப் போலவே மருத்துவ சேவை செய்து வந்தார், இந்த கொரனோ காலத்தில் மருத்துவ பயிற்சி செய்ய‍ வேண்டாம் என அவர்களது குடும்பத்தார் கேட்டுக் கொண்டும், இவர் கேட்காமல் சேவை செய்து அன்னார் இன்று மறைந்தார்கள். தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவர் குறள் போல் வாழ்ந்து மறைந்த அய்யா மருத்துவர் குமார் அவர்களுக்கு தஞ்சை டுடே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.