சென்னை: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட் கேர் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றி உள்ள ஆறு மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் அனைத்தும் நிரம்பிய நிலையில் மேலும் வரக்கூடிய நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தும் விதமாகத் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக டென்ட் அமைத்து 300 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது.

நான்கு நாட்களில் அமைக்கப்பட்ட இந்தத் தற்காலிக கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறும் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த மையத்தில்நோயாளிகளுடன் இருப்போர், மருத்துவர்கள் என அனைவருக்கும் தனித் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்