தஞ்சை மற்றும் மயிலாடுதுறை இடையே இருப்பு பாதை மின்மயமாக்கும் பணி நடைப்பெற்று வந்தது, இப்போது அது முடிவுற்ற நிலையில் ஆய்வோட்டம்(Test Run) நடை பெற்றது.

மணிக்கு நூறு கிலோ மிட்டர் வேகத்தில் இந்த ஆய்வோட்டம் நிகழ்த்தப்பட்டதாக திருச்சி தென்னக இரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சரவணன் கூறியுள்ளார் மேலும் அவர் கூறும் போது , இந்த பயிற்சி ஓட்டம் அதிகாலை 4:50 க்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு 5:40க்கு தஞ்சை வந்தடைந்ததாக கூறியுள்ளார்.

தஞ்சைப் பயணிகள் மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை சென்றடையும் நேரம் நிறைய சேமிக்கப்படும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.