தஞ்சையின் பழமையான சந்தைகளில் பூச்சந்தை ஒன்று, அது இயங்கும் இடமே பூக்காரத் தெருவென்று அழைக்கப்படும், மிகவும் நெருக்கமான இடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது, கொரோனா தொற்று காரணமாக இச்சந்தை மார்ச் மாதமே மூடப்பட்டது, பின்பு கல்லுக்குளம் அருகேயுள்ள கிறித்துவ தேவாலயத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது, இப்போது, மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறந்ததால், இந்தச் சந்தை இப்போது அண்ணா நகர் 14வது தெருவில் உள்ள ஆண்கள் மேநிலைப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.