தஞ்சாவூர் டிச, 12-தஞ்சாவூர் மணிமண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினைப் பொருள்களை ஒன்றாக பிரசித்திபெற்ற தலையாட்டி பொம்மை செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதுதில்லி இந்திய தேசிய பாரம்பரிய கலை பண்பாட்டு அறக்கட்டளை பாரம்பரிய கல்வி மற்றும் தகவல் மையம் ஆகியவை சார்பில் இந்தியா முழுவதும் கைவினைப்பொருள் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டு வருகிறது இதன்படி இண்டாக் தஞ்சாவூர் மையம் சார்பில் தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினைப் பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முனிசிபல் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தூய இருதய மகளிர் மேல்நிலை சாட்சியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாணவர்களுக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன எப்படி செய்வது வண்ணம் தீட்டுவது போன்றவை குறித்த செயல்முறை விளக்கத்தை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கைவினைக் கலைஞர் பிரபு கலையரசி பிரபு ஆகியோரும் செய்து காண்பித்தனர் இதையடுத்து மாணவ-மாணவிகள் தலையாட்டி பொம்மையை செய்து பார்த்தனர் நிறைவாகஇது குறித்து கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டது மாணவ மாணவிகள் எழுதிய கட்டுரைகள் இண்டாக் புதுடில்லி தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/