தஞ்சாவூர் சன 13: கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை சரக முதல் பெண் டிஐஜியாக பொறுப்பேற்ற கயல்விழி தெரிவித்தார்.

தஞ்சை சரக டிஐஜியாக இருந்த இருந்த பிரவேஷ்குமார் திருநெல்வேலி சரக டிஐஜி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை காவல் பயிற்சி கல்லூரி டிஐஜியாக இருந்த கயல்விழி தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் காவல் சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை சரகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரவுடிகள், சமூகவிரோதக் குற்றச் செயல்களான கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது கொரோனா பரவல் காலமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி அரசின் விதிமுறைகளை பின்பற்ற காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/