தஞ்சாவூர் செப் 28 தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் நடந்த பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் கலந்து கொண்டு பேசியதாவது.

உணவு ஏற்றுமதியில் எந்த அளவுக்கு இருக்கிறோமோ அதை பொருத்து உலக அரங்கில் நமக்கான முக்கியத்துவம் அமையும் எனவே உணவுத் தொழிலில் தொழில்நுட்பத்தை சிறப்பாக கொண்டு வரவேண்டும் உணவு பதன தொழிலில் உலக அளவில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.

தமிழகத்தில் பழங்கள் காய்கறிகள் மலர்கள் போன்றவை இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யும் நிலை உள்ளது தில்லியிலிருந்து உணவுப் பொருள்களை இங்கு கொண்டு வருவதில் சிரமங்கள் உள்ளன இங்கேயே உற்பத்தி செய்து இங்கு பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்போது அனைவருக்கும் உணவு கிடைக்கும் உற்பத்தியான உணவுப் பொருள்களும் வீணாகாமல் தடுக்க முடியும்.

உணவு பதன தொழில் துறை நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது சமுதாயத்தின் முழுமையான பங்களிப்பு இருந்தால்தான் லாபத்தைப் பார்க்க முடியும் இத்தொழில் விவசாயிகள் லாபத்தை அடைவதற்கு தேவையான உதவிகளை அரசு செய்கிறது நம் நாட்டில் உற்பத்தியை பெருக்கி முன்னேற்றம் அடையவும் இவ்வாறு அவர் பேசினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/