நாட்டின் பல்வேறு நகரங்களில் வட்ட வழிப்(Circle Route) பேருந்து தடங்கள் ‍செயல்படும் , அதாவது சில குறிப்பிட்ட நிறுத்தங்களை ஒரு வட்டப்பாதையாக வரையறுத்துக் ‍கொண்டு, தொடர்ந்து அந்தப்பாதையில் பேருந்து செயல்படும் இதனை வட்டப் பேருந்து(Circle Bus) என்றும் அந்த வழித்தடத்தை வட்ட வழித்தடம் என்றும் கூறுவார்கள்.

இப்போது தஞ்சையில் பழைய பேருந்து நிலையம், மேம்பாலம், கணபதி நகர் எல்.அய்.சி காலனி, மெடிக்கல் காலேஜ், புதிய பேருந்து நிலையமென ஒரு வட்டப்பாதையை உருவாக்கி அதில் செயல்படத்துவங்கியுள்ளது.

பேருந்து எண் 99 என்றும் இதன் குறைந்த பட்ச கட்டணம் ரூ 5 என்றும் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.