தஞ்சாவூர் அக்.24-தஞ்சை மாநகரில் வருகிற 26-ஆம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும்:தஞ்சை நகர மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மின் பராமரிப்பு குறித்து பின்வரும் தகவலைக் கூறியுள்ளார்.

தஞ்சை நீதிமன்றம் சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் வருகிற 26-ந் தேதி பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இதனால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது அதன் வகையில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் வருமாறு.

அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மின் பாதையில் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரிரோடு, காமராஜர் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகம் இருக்காது.

திலகர் திடல் மின்பாதையில் மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம். வண்டிக்கார தெரு மின் பாதையில் ரயிலடி , சாந்தப் பிள்ளை கேட்டு, மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது சுற்றுலா மாளிகை மின் பாதையில் கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையா பாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், திரு ராதாகிருஷ்ணன் நகர்.

மார்க்கெட் மின், பாதையில். பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு,, கீழவாசல், எஸ்.என்.. எம் ரகுமான் நகர், அரிசி கார தெரு, புதுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ,ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது கீழவாசல் மின்பாதையில் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தர் பாளையம், கரம்பை,சாளக்கார தெரு |பழைய பஸ் நிலையம், கொண்டி ராஜபாளையம், வ. உ. சி நகர், மின்பாதையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/