தஞ்சாவூர் அக் -20 பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடுமையாக நித்தமும் நாள்தோறும் உயர்ந்து வருகின்ற பெட்ரோல், டீசல், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்! ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மலைச்சாமி,நிர்வாகிகள்ராஜா, ஜான்பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அதன் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

ஏழை ,எளிய,நடுத்தர குடும்பங்களை பாதிக்கின்ற சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ,கார்ப்பரேட் நிறுவனங்களின் ஓலா,ஊபர் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்,ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ ஆப் ஏற்படுத்தி உதவிட வேண்டும், ஆட்டோ புதுப்பித்தல் காலங்களில் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் 10,000 வழங்க வேண்டும், நலவாரிய புதுப்பித்தலுக்கு ஆன்லைன் முறையை எளிமைப்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை முன்‍ வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/