தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மற்றும் விவசாயிகள் சங்கமும், நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கலால் பிரிவு அலுவலரை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் அளித்தனர்.

அதன் பின்னர் அதே ‍ கோரிக்கை விண்ணப்பத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் வழங்கி தங்களது கோரிக்கை முன் வைத்தனர்.

கொரோனா தொற்றினால் மக்களின் வருமானம் குறைந்து சிரமச் சூழலில் வாழும் இந்த நேரத்தில், டாஸ்மாகுகளின் எண்ணிக்கை குறைப்பது, பொது மக்களின் இடையூறுகளை தவிர்ப்பது போல், மக்களின் வாழ்வாதாரத்தையும் கொஞ்சம் காப்பாற்றும் என்பதில் எந்தவித அய்யமுமில்லை.