செப்டம்பர் 14, 15, 16 தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகின்றது, கொரொணா பாதிப்பின் காரணமாக இம்முறை வழக்கம் போல் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற போவதில்லை என்றும் , இம்முறை ஒமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டம் நடைபெறப்போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
குறுகிய நாட்கள் மட்டுமே நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில், கலந்து கொள்ளும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோணா சோதனைச் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மூன்றுநாட்களுக்கு மட்டுமே கூடும் இந்த சட்டமன்ற கூட்டத்தில் கொரோணா குறித்தான எடுத்துள்ள மற்றும் எடுக்க உள்ள நடவடிக்கைகளே பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
