தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் நேரடி ‍‍நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கிய நெல் மூட்டைகள் வேறிடத்திற்கு மாற்றாமல் கொள் முதல் நிலையங்களில் வெளியிலும் சாலைகளிலும் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வேறு இடத்திற்கு மாற்றப்படாமல் நெல் கொள்முதல் நிலையங்களிலும் சாலைகளிலும் தேங்கி உள்ளதால் புதிதாக கொள்முதல் செய்வதின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் உழவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர்.