தஞ்சாவூர் அக்.6-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
2021-22-ம் ஆண்டு முதல் பருவம் கடந்த 1ம் தேதி தொடங்கியது விவசாயிகள் நலன் கருதி விடுமுறை நாட்களான காந்தி ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்றது.
நேற்று முன்தினம் மட்டும் 4,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது கடந்த 4 நாட்களில் 50,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது இந்த மாதத்தில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் செய்யப்படும் மாலை நேரத்தில் மழை பெய்வதால் கொள்முதல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தினமும் காலை 7 மணிக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 244 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைன் முறை கொள்முதலுக்கு உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்கனவே உள்ள பழைய முறையிலேயே உழவர்களிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறோம், ஆன்லைன் முறையிலும் கொள்முதல் நடைபெறும் எந்த முறையாக இருந்தாலும் முதலில் கொண்டு வரும் உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் சாலையோரம் நெல்லைக் கொட்டி உழவர்கள் காய வைப்பது காலங்காலமாக நடைபெறும் நிகழ்வு.
தஞ்சை மாவட்டத்திற்கு இது புதிதல்ல தரையை விட சாலையில் நெல்லைக் கொட்டி காயவைத்தால் ஈரப்பதம் குறைவாக கிடைக்கும் என்பதற்காகத்தான் சாலையோரம் நெல்லை விவசாயிகள் கொட்டி காய வைக்கிறார்கள். கொள்முதல் நிலையங்களில் ஊழல் புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்புடைய பட்டியல் எழுத்தர் உதவுபவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். ஒரு நெல் உலர்த்தும் இயந்திரத்தை வேளாண் பொறியியல் துறை வழங்கியுள்ளது.
இந்த இயந்திரம் ஒரத்தநாடு புதூர், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்படுகிறது. உழவர்கள் கொண்டுவரும் நெல்லை காயவைத்து தரப்படும் இது வெற்றிகரமாக அமைந்தால் பிற மாவட்டங்களிலிருந்து மேலும் எந்திரங்கள் வரவழைக்கப்படும்.
குறுவை பருவத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020- 21 -ஆம் ஆண்டு முதல் பருவத்தில் 10 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஏக்கருக்கு 60 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய உள்ளது ஏக்கருக்கு 70 முட்டைகள் வந்திருந்தாலும் வேளாண் அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்று வந்தால் அதுவும் கொள்முதல் செய்யப்படும்.
இந்த பருவத்திற்கு தேவையான அளவுக்கு சாக்குகள் இருப்பு உள்ளதால், தட்டுப்பாடு இல்லை மாவட்டத்தில் 3 நடமாடும் கொள்முதல் குழுக்கள் இன்று முதல் பணியை தொடங்க உள்ளன இக்குழுக்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/