கல்லணை திறந்து 120 நாட்களுக்கு மேலாகியும் காவிரி பாசன பகுதிகளின் கடைமடை பகுதிகளை தண்ணீர் இன்னும் சென்று சேர வில்லை என உழவர்கள் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.

சேதுபாவா சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை சரிவர பெய்யாததாலும், காவிரி நீர் கடைமடையை இன்னும் சென்று சேராத காரணத்தாலும் அதனைச் சுற்றியுள்ள ஏரி, குளம் மற்றும் கம்மாய்களில் நீரின்றி வறண்டு உள்ளது இதனால் சம்பா சாகுபடி செய்வது கேள்விக்குறியே என கலக்கத்துடன் கூறுகின்றனர்.