தீபாவளி நெருங்கி வருகின்றது, கொரோனா தொற்றும் குறைந்த பாடில்லை, மக்கள் பல மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த நிலையில் தீபாவளி ஒரு பிரிவினருக்கு கொஞ்சம் மன மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது, ஒரு சாரருக்கு இந்த இக்கட்டான பொருளாதாரச் சூழல் மேலும் இக்கட்டை உருவாக்கி உள்ளது என்று கூறுகின்றனர்.
மக்கள் தீபாவளிக்கு துணிமணிகள், பொருட்கள் வாங்குவதில் ஆர்வமாகி வருகின்றனர், கொரோனா தொற்றோ, எச்சில் மற்றும் கைகளை கண்ட இடங்களில் தொட்டு பின்பு அதனை வாய் மூக்கு போன்றவற்றில் தொடுவதால் அதிகமாக பரவுகின்றது.
இந்தக் கொரோனா பரவலை தனிமனித பாதுகாப்பு, இடைவெளி, தூய்மை இவற்றாலேயே தடுக்க முடியும், தீபாவளி நேரத்தில் கடைகளுக்கு கூட்டம் அதிகமாக வருமென்பதால் மக்களை எச்சரித்து அறிவுறுத்த, கடை வீதிகளின் பல்வேறு இடங்களில் 100 ஒலி பெருக்கி அமைத்து விழிப்புணர்வு எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து தஞ்சை மாநாகராட்சி ஒலி பரப்ப உள்ளது. திருவிழாவை மகிழ்ச்சியோடு , கொரோனா தொற்றில்லாமல் கொண்டாடுவதும் மிக முக்கியமானதாகும்