தஞ்சாவூர் அக்.1-தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நபார்டு நிறுவனம் இணைந்து பயிர்களில் மகசூல் அதிகரிப்பு போஸ்டர் மற்றும் டானிக்குகள் பங்கு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் 28- ம் தேதி முதல் 30- ம் தேதி வரை 3 நாட்கள் திருவையாறு எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் இறுதி விழாவில் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி முதல்வர் வேலாயுதம் கலந்துகொண்டு விவசாயிகளை வாழ்த்தியும் “வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மகசூல் அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள்” என்ற நூலை வெளியீட்டும் விவசாயிகள் விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவது எப்படி வேளாண்துறையில் லாபகரமாக விவசாயம் செய்வது பற்றிய வழிமுறைகளை கையாள்வது என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

பயிற்சி முகாமிற்கு வருகை தந்த விவசாயிகளுக்கு நூல்களை வழங்கினார்,பயிற்சி முகாமில் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் திருமுருகன் முனைவர் தமிழ்செல்வி முனைவர் அருள்செல்வி மற்றும் எம் எஸ் எஸ் ஆர் எஃப் விஞ்ஞானி சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/