தஞ்சாவூர் அக்.1- சுதந்திர போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகத் தலைவர் தோழர் பி சீனிவாசராவ் நினைவு நாள். மலரஞ்சலி நிகழ்ச்சி. தஞ்சாவூர் கீழராஜவீதி மாவட்ட அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஜி.கிருஷ்ணன் தலைமையில் சீனிவாச ராவ் அவர்களின் 60வது நினைவு நாளில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொருளாளர் ந.பாலசுப்பிரமணியம், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா,டிஎன்சிஎஸ்ஸி தொழிற்சங்க தலைவர்கள் தி.கோவிந்தராஜன்,சி.பாலையன்,சந்தான கிருஷ்ணன், தெரு வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.பி. முத்துக்குமரன், கட்டுமான சங்கத்தலைவர் செல்வம் விவசாய தொழிலாளர் சங்க தலைவர் சங்கிலிமுத்து விவசாய சங்கத் தலைவர் கலியமூர்த்தி உடலுழைப்பு தொழிற்சங்க தலைவர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கீழத் தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைக்கு உள்ளாகி அடிமைகளாக நடத்தப்பட்ட சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கன்னடத்தில் பிறந்த பி.சீனிவாசராவ் அவர்களுக்கு பொறுப்பளித்து அனுப்பப்பட்டு அவர் அங்கேயே தங்கி தாழ்த்தப்பட்ட மக்களின் கொடுமைகளுக்கு முடிவு கண்டார்.

குறிப்பாக பண்ணை அடிமைகளை கட்டிவைத்து அடிப்பது சாணிப்பால் சவுக்கடி என இந்தக் கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்தபோது அடித்தால் திருப்பி அடி என்றும் சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவு கட்டி அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்படுத்தியது முதற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களை தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவர் காரணமாக இருந்தார் என்பதை குறிப்பிட்டு இன்று தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/