தஞ்சை அக் 12: தஞ்சாவூர் மாவட்டம் ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி பேசுகையில், பெண்குழந்தைகள் வாழும் வீடு தேவதைகள் வாழும் வீடு அதுபோல பள்ளியில் உள்ள 114 தேவதைகளுக்கும் வாழ்த்துகள் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர் ராஜேஸ்வரி பெண்குழந்தைகளின் உரிமைகள், சந்திக்கும் சிக்கல்கள், அரசு வழங்கும் நலத்திட்டங்கள், மாணவிகளுக்கு தேவையான விழிப்புணர்வு குறித்து பேசினார். பள்ளி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் அனைவரும் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். மாணவி தங்கசாரதி நன்றி கூறினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/