பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை ‍2006, 2011 மற்றும் 2016 யில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் இருந்த துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக நுரையிரல் பாதிப்பு அடைந்து மறைந்தார்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவரான துரைக்கண்ணு அவர்கள் மிக எளிய மனிதராகவும், எல்லோராலும் அணுகக் கூடியவராகவும் விளங்கியவர் தான் துரைக்கண்ணு.

சென்ற மாதம் துரைக்கண்ணு அவர்கள் முதல்வரின் தாயாரின் மறைவிற்காக செல்லும் வழியில் உடல் நிலையில் பாதிப்பு எற்பட்டதால் அவர் சென்ற மாதம் 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவரது நுரையீரல் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் எக்மோ கருவி மூலம் சுவாச வசதிகளை செய்து கொடுத்த நிலையில் நேற்று 31 ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் மருத்துவர்கள் ‍தெரிவித்த நிலையில், நேற்று இரவு 11:30 மணியளவில் மறைந்தார் என்று வருத்ததுடன் செய்தி வெளியிட்டது.