தஞ்சை சூலை 11: தஞ்சை மாவட்டம் பேராவூரணி நீலகண்டபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மாா்கள் நலன் சாா்ந்த ஊட்டச்சத்து மற்றும் கல்விப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தாண்டு முதல் முறையாக அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் சீருடை வழங்கப்படுகிறது. பேராவூரணி நீலகண்டபுரம் தொடக்கப் பள்ளி வளாகத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற சீருடை வழங்கும் நிகழ்வில் அங்கன்வாடி மைய ஆசிரியா் லலிதா, உதவியாளா் விஜயா, மெய்ச்சுடா் நா. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது போன்ற எளிய சூழலில் இருந்து பள்ளிக்கு வந்து பயிலும் மாணவர்கள் தான் நாளை நகர் புறங்களில் எல்லா வசதிகளுடன் பயின்று வரும் மாணவர்களுடன் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எழுதி அவர்களுடன் போட்டியிட வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்
https://thanjai.today/